/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொண்டம்பட்டி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
/
கொண்டம்பட்டி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
கொண்டம்பட்டி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
கொண்டம்பட்டி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
ADDED : டிச 07, 2024 07:24 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு அணை அருகே ஊத்தங்கரை, திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று கொண்டம்பட்டி கிராம மக்கள், காவிரி கூட்டு குடிநீர் திட்-டத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த, ஆறு மாதமாக முறை-யான குடிநீர் வழங்கவில்லை. பஞ்., நிர்வாகத்திடம் பல முறை கூறியும் நடவடிக்கை
எடுக்காததால், ஆத்திரமடைந்த கொண்டம்-பட்டி மக்கள், காலி குடங்களுடன், பாம்பாறு அணை அருகே உள்ள, தேசிய
நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு-பட்டனர்.ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முருகன், பி.டி.ஓ., பாலாஜி ஆகியோர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக
கூறியதைய-டுத்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக ஊத்தங்கரை--திண்-டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது
நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.