/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோதண்டராம சுவாமி கோவில் தேரோட்டம்
/
கோதண்டராம சுவாமி கோவில் தேரோட்டம்
ADDED : ஏப் 13, 2025 04:37 AM
ஓசூர்: ஓசூர், நேதாஜி ரோட்டிலுள்ள சீதா, லட்சுமண சமேத, கோதண்-டராம சுவாமி கோவிலில், ராம
நவமி மற்றும் ரதோற்சவ விழா கடந்த, 6ல் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. கடந்த, 8ல், அனுமந்த வாகன உற்சவம், 9ல் சேஷ வாகன உற்-சவம், 10ல், சந்திரமண்டல உற்சவம், நேற்று முன்தினம் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி-யான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், சீதா, லட்சுமண சமேத கோதண்டராம சுவாமி உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது.
நேதாஜி ரோடு, எம்.ஜி., ரோடு, போஸ் பஜார் வழியாக சென்று, மீண்டும் கோவில் முன் தேர் நிலையை அடைந்தது. திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் அறங்-காவலர்கள் கல்பனா நீலகண்டன், சுந்தரம், முனிராஜ், திருப்ப-ணிக்குழு நிர்வாகி சூர்யகணேஷ், அர்ச்சகர்கள் கேசவன், ரகு-ராமன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் இன்று அஸ்வ வாகன உற்சவம் நடக்கிறது. வரும், 20ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது.

