/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ்-ல் கிருஷ்ண ஜெயந்தி போட்டி, பரிசு
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ்-ல் கிருஷ்ண ஜெயந்தி போட்டி, பரிசு
ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ்-ல் கிருஷ்ண ஜெயந்தி போட்டி, பரிசு
ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ்-ல் கிருஷ்ண ஜெயந்தி போட்டி, பரிசு
ADDED : ஆக 28, 2024 07:34 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.தியேட்டர் எதிரிலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகைக்கடையின் மற்றொரு அங்கமான, ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இதில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, 'எங்கள் வீட்டு சுட்டிக்கண்ணன்' என்ற தலைப்பில், ஒன்று முதல், 10 வயது வரையுள்ள குழந்தைகள், கிருஷ்ணர், ராதை வேடம் அணியும் போட்டியும், பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கிருஷ்ண ஜெயந்தி அன்று, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக்கடைக்கு, கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்து, பாடல்களுக்கு நடனம் ஆடி அனைவரையும் அசத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும், ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக் கடையின் உரிமையாளர் ரமேஷ், பரிசு வழங்கி பாராட்டினார்.
மேலும், சுபமுகூர்த்த நாட்களையொட்டி, காஷ்விகா பட்டு, காஞ்சிபுரம் பட்டு, சாத்விகா பட்டு, கலாஞ்சலி பட்டு, லக்ஷனா பட்டு, ஆரணி பட்டு, தர்மாவரம் பட்டு, பாகல்பூரி பட்டு மற்றும் பேன்சி பட்டு ஆகியவை, தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதாகவும், 50,000 ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு, 916 தங்க நாணயம் அல்லது வெள்ளி காமாட்சி விளக்கு மற்றும் சில்வர் குடம் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

