/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி Øதொகுதி ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்
/
கிருஷ்ணகிரி Øதொகுதி ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி Øதொகுதி ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி Øதொகுதி ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 07, 2025 12:46 AM
கிருஷ்ணகிரி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நவ., 4 முதல் டிச., 4 வரை வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியை சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்-2க்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் சதீஸ்குமார், ரமேஷ், துணை தாசில்தார் (தேர்தல்) கணேசன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். அதில், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டும், வாக்காளர் திருத்தப்பணிக்கான விண்ணப்பம் வழங்கப்படும். பெயர் இல்லாதவர்கள், புதிய விண்ணப்பம் கொடுத்து, பட்டியலில் சேர்ந்து கொள்ளலாம். இனி இரண்டு இடங்களில் பெயர்கள் வராதவாறு, 'க்யூஆர்' கோடு தயாரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். விண்ணப்பங்களை பார்த்தால், உங்கள் சந்தேகங்கள் அனைத்துக்கும் விடை கிடைக்கும். மேலும்
சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என்றனர்.

