/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., சார்பில்சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

ADDED : ஜன 15, 2025 12:38 AM
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, ஹிந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் முன்னிலையில், சமத்துவ பொங்கலை துவக்கி வைத்து பேசுகையில்,'' உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து, ஜாதி, மத பாகுபாடின்றி கொண்டாடப்படுவது பொங்கல் விழாதான். இந்நாளில் விவசாயம், தொழில் உள்ளிட்டவை வளர்ச்சி பெற்று எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்,'' என வாழ்த்துகிறேன் என்றார். பின்னர் மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள், இளைஞரணியினருக்கு பொங்கல் பரிசு வழங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, முன்னாள்
எம்.பி., வெற்றிச்செல்வன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தினேஷ்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், சுப்பிரமணி மகேந்திரன், நாகோஜனஹள்ளி, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.