sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நூலகத்தை சுற்றிலும் குப்பை கழிவுகளால் நாற்றம்

/

நூலகத்தை சுற்றிலும் குப்பை கழிவுகளால் நாற்றம்

நூலகத்தை சுற்றிலும் குப்பை கழிவுகளால் நாற்றம்

நூலகத்தை சுற்றிலும் குப்பை கழிவுகளால் நாற்றம்


ADDED : ஆக 03, 2011 12:59 AM

Google News

ADDED : ஆக 03, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ஓசூர் சிப்காட் அண்ணாமலை நகர் ஊரக நூலகத்தை சுற்றிலும் பஞ்சாயத்து குப்பைகள், தனியார் ஹோட்டல் உணவுகளை கொட்டப்படுவதால், நூலகத்திற்கு வரும் வாசகர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.ஓசூர் சிப்காட் அண்ணாமலை நகரில் தமிழ்நாடு பொதுநூலகத்துறை சார்பில் ஊரக நூலகம் செயல்படுகிறது. இந்நூலகத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சிப்காட் தொழிலாளர்கள் சென்று தினசரி பத்திரிக்கைகள், பொதுஅறிவு புத்தகங்கள், பல்வேறு வரலாற்று புத்தகங்களை படித்து ஓய்வு நேரத்தை பயனுள்ள முறையில் செலவழித்து வருகின்றனர்.இந்த நூலகத்தை சுற்றிலும் தற்போது சுற்றுவட்டார குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். அதே போல், சிப்காட்டில் உள்ள அனைத்து ஹோட்டல், டீக்கடைகளில் வீணாகும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளும் இங்கு வந்து கொட்டப்படுகிறது.இதனால், நூலகத்தின் நுழைவு வாயில் பகுதி மட்டுமின்றி சுற்றிலும் காணப்படும் குப்பைகள், கழிவுகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் நூலகத்திற்குள் வாசகர்கள் இருந்து படிக்க முடியவில்லை.

காற்று அடிக்கும்போது, குப்பைகள், கழிவு பேப்பர்கள், நூலகத்திற்குள்ளும், நூலக வளாகத்திற்கும் வந்து விழுகிறது. இதனால், நூலகத்தின் உள்ளேவும், சுற்றிலும் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பலமுறை வாசகர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், நூலக மேல் அதிகாரிகளுக்கும் தெரிவித்தும இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தூர்நாற்றம், நோய் பரவும் பீதியால் தற்போது நூலகத்திற்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை அடியோடு குறைந்து விட்டது.கடந்த காலத்தில் நூலகத்துக்கு தினம் 50க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து சென்றனர். தற்போது, தினசரி பத்து வாசகர்கள் வந்தால் அபூர்வமாக உள்ளதாக அங்கு பணிபுரியும் நூலகர் தெரிவித்தார். இதனால், சிப்காட்டில் துவங்கப்பட்ட ஊரக நூலகம், தற்போது வாசகர்கள் வருகை குறைவால் இழுத்து மூடவும் வாய்ப்புள்ளதால், அப்பகுதி வாசகர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us