sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்லூரி மாணவர்களின் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

/

கல்லூரி மாணவர்களின் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவர்களின் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவர்களின் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 01, 2011 11:21 PM

Google News

ADDED : செப் 01, 2011 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : ஓசூரில் போலீஸார் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களின் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளில் ராக்கிங், ஈவ்டீசிங் வன்முறைகளை தடுக்க மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து கல்லூரிகளிலும் போலீஸார் துண்டு பிரசுரங்கள் மூலமும், கருத்தரங்கம் நடத்தியும் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

ஓசூர் சப்-டிவிஷன் போலீஸார் சார்பில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ராகிங், ஈவ் டீசிங் பாதிப்புகள், இந்த சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது போலீஸார் எடுக்கும் நடவடிக்கைள் ஆகியவை குறித்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.



ராயக்கோட்டை சாலையில் உள்ள அமேரியா பெட்ரோல் பங்க் அருகே விழிப்புணர்வு பேரணி துவங்கியது. பேரணியை ஓசூர் ஏ.எஸ்.பி., ரம்யா பாரதி தலைமை வகித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் (பொ) சரவணன் முன்னிலை வகித்தார். கூடுதல் எஸ்.பி., செந்தில்குமார் பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தியபடி சென்று துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்தும், கோஷங்கள் எழுப்பியும் ஈவ் டீசிங், ராக்கிங் ஆகியவை குறித்து விழிப்புணர்வு செய்தனர்.



பேரணி ராயக்கோட்டை சாலை, காமராஜ் காலனி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் அதியமான் இன்ஜினிரிங் கல்லூரி, கோனேரிப்பள்ளி பி.எம்.சி., டெக், ஓசூர் செயின்ட் ஜோசப் ஆகிய கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us