/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் போட்டா போட்டி
/
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் போட்டா போட்டி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் போட்டா போட்டி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் போட்டா போட்டி
ADDED : செப் 03, 2011 12:20 AM
கிருஷ்ணகிரி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.,வினர் ஆயிரக்கணக்கானோர் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று விண்ணப்பங்களை வழங்கினர்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று (செப்.,2) முதல் விருப்ப மனுக்களை வழங்க கட்சி தலைமை அறிவித்திருந்தது. நகராட்சி தலைவருக்கு போட்டியிட விரும்புவர்கள் 10 ஆயிரம் ரூபாயும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 2 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 2 ஆயிரத்து 500 ரூபாயும், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 500 ரூபாயும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி , ஓசூர் ஆகிய நகராட்சி மற்றும் காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, மத்திகிரி ஆகிய டவுன் பஞ்சாயத்துக்களில் போட்டியிட ஏராளமான அ.தி.மு.க.,வினர் விண்ணப்பங்களை அளித்தனர். மேலும் ஊத்தங்கரை, ஓசூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, கெலமங்கலம், சூளகிரி, தளி, பர்கூர், மத்தூர், வேப்பனப்பள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியிடவும் ஏராளமான அ.தி.மு.க.,வினர் விண்ணப்பங்களை வழங்கினர்.
கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றார். எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட அவைத்தலைவர் அசோக்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட தலைவர் தென்னரசு, செயலாளர் ராஜேந்திரன் மற்றும் இணை செயலாளர் முனிவெங்கடப்பன், முன்னாள் எம்,பி.,பெருமாள், தொகுதி செயலாளர் காத்தவராயன், நகர செயலாளர் கேவசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

