ADDED : பிப் 24, 2024 03:29 AM
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த ஜே.காருப்பள்ளி அருகே, எச்.செட்டிப்பள்ளி கணேஷ் நகரை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன், 23, கூலித்தொழிலாளி; நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தை சிலர் வெட்டி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, அவரது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் முனிகிருஷ்ணன் அந்த மின் ஒயரை இணைக்க முயன்றார். அப்போது தவறுதலாக, மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டிப்பர் லாரி மோதி டிரைவர் சாவுஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே
துப்புகானப்பள்ளியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 25, டிரைவர்; இவர் நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு ஓசூர் - உத்தனப்பள்ளி சாலையில் உள்ள இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே, ஹோண்டா யுனிகார்ன் பைக்கில் சென்றார். அப்போது, அவ்
வழியாக வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
எருது விடும் திருவிழாபோச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாளேகுளி கிராமத்தில் நேற்று, 24ம் ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட காளைகளை அழைத்து வந்திருந்தனர். குறிப்பிட்ட துாரத்தை, குறைந்த நேரத்தில் கடக்கும் காளைக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 75 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக, 60 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 100 பரிசுகள் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் விழாவை காண வந்தனர்.