/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய நெடுஞ்சாலை துறை வசமானது கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி
/
தேசிய நெடுஞ்சாலை துறை வசமானது கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி
தேசிய நெடுஞ்சாலை துறை வசமானது கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி
தேசிய நெடுஞ்சாலை துறை வசமானது கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி
ADDED : ஜன 25, 2024 10:30 PM
கிருஷ்ணகிரி:“ஜன., 23 முதல் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை எடுத்துக் கொண்டு கட்டணம் வசூலிக்கிறது,'' என, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி. செல்லக்குமார் கூறினார்.
இது குறித்து நேற்று முன் தினம் கிருஷ்ணகிரியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரியில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய அரசு, 60 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, டோல் நிறுவனத்தினர் திட்டம் தயாரித்து வழங்கினர்.
இந்நிலையில், சுங்கச்சாவடியை முறையாக பராமரிக்கவில்லை, அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் டோல் நிர்வாகம் செலுத்தவில்லை என, மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும், டோல் நிர்வாகம் கண்டு கொள்ளாததால், ஜன., 23 முதல் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த சுங்கச்சாவடியை எடுத்துக் கொண்டு கட்டணம் வசூலிக்கிறது. மத்திய அரசிடம் சுங்கச்சாவடி சென்றுவிட்டதால், இனி இடமாற்றம் செய்ய எந்த சிரமமும் இருக்காது. அதனால், விரைவில் சுங்கச்சாவடி இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
எந்த உண்மையான பக்தனும் சுவாமியை வைத்து அரசியல் செய்ய முடியாது. நாங்கள் சவால் விடுகிறோம். 10 ஆண்டுகால, பா.ஜ. ஆட்சி, அவர்களுடைய சாதனை என, அவர்கள் பட்டியல் போட்டு விவாதம் நடத்த தயார் என்றால், நான் குற்றவாளி கூண்டில் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.
மதம் என்ற ஒரு வார்த்தையை மட்டும் உச்சரிக்காமல், நாங்கள் தேர்தலை சந்திக்க தயார் என, பா.ஜ. தேர்தலை சந்தித்து பார்க்கட்டும். இந்தியாவில் ஒரு மாநிலத்திலும், ஒரு சீட்டையும் பெற முடியாது.
ஜோலார்பேட்டை - ஓசூர் ரயில் பாதை அமைக்கும் பணிக்கு, ஆறு மாதங்களுக்குள் ஒப்புதல் பெற்று தந்துவிட்டேன். கொரோனாவால் திட்டப்பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு ஒதுக்கிய, 2.45 கோடி ரூபாய் நிதியில், திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு சரிபார்க்கும் பணிகள் நடக்கின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.

