தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு


ADDED : நவ 19, 2026 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம், ஓசூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.

மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். முன்னாள்

எம்.எல்.ஏ., முருகன், வேப்பனஹள்ளி, தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பிரகாஷ் பேசுகையில், ''வரும், 27ம் தேதி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., இளைஞரணி செயலாளருமான உதயநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்து, மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பகுதி, வார்டு, கிளை, ஒன்றிய, பேரூர் பகுதிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கட்சி கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். ஒரு மாதம் முழுவதும், உதயநிதி பிறந்த நாளை கொண்டாட வேண்டும்,'' என்றார்.

துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கண்ணன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் மாணிக்கவாசகம், பகுதி செயலாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us