/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 21, 2025 01:47 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், ஓசூர், மீரா மகால் திருமண மண்டபத்தில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மேயர் சத்யா, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பேசுகையில், ''மேற்கு மாவட்டத்தில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையில், 44 சதவீதம் உறுப்பினர்களை சேர்த்து, வேப்பனஹள்ளி தொகுதி முதலிடத்திலும், 43 சதவீதம் சேர்த்து ஓசூர், 2ம் இடத்திலும், 41 சதவீதம் சேர்த்து, தளி, 3ம் இடத்திலும் உள்ளன. உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்,'' என்றார்.துணை மேயர் ஆனந்தய்யா, தேன்கனிக்கோட்டை பேரூர் செயலாளர் சீனிவாசன் உட்பட பலர்
பங்கேற்றனர்.

