sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கே.ஆர்.பி., அணைக்கு இன்று 68 வயது கால்வாய் ஆக்கிரமிப்பால் பாதிப்பு; கடைமடை விவசாயிகள் வேதனை

/

கே.ஆர்.பி., அணைக்கு இன்று 68 வயது கால்வாய் ஆக்கிரமிப்பால் பாதிப்பு; கடைமடை விவசாயிகள் வேதனை

கே.ஆர்.பி., அணைக்கு இன்று 68 வயது கால்வாய் ஆக்கிரமிப்பால் பாதிப்பு; கடைமடை விவசாயிகள் வேதனை

கே.ஆர்.பி., அணைக்கு இன்று 68 வயது கால்வாய் ஆக்கிரமிப்பால் பாதிப்பு; கடைமடை விவசாயிகள் வேதனை


ADDED : நவ 10, 2024 01:12 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, நவ. 10-

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை கட்டி, 67 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அணையின் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத

தால், நீர்வரத்தின்றி கடைமடை விவசாயிகள் மிகவும் பாதித்துள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியமுத்துார் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 52 அடி ஆழமும், 3,290 சதுர அடி நீளமும், 1.66 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு வைக்கும் அளவிற்கும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை கட்டப்பட்டுள்ளது. அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியால் கடந்த, 1957 நவ., 10ல் கட்டி திறக்கப்பட்டது. அணையின் வலது புற கால்வாய், 14.20 கி.மீ., நீளமும், இடது புற கால்வாய், 18.20 கி.மீ., நீளம் கொண்டதாகவும், வினாடிக்கு, 185 கன அடி நீர் கடத்தும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து

மழைக்காலங்களில் கர்நாடகாவில் இருந்தும், ஆந்திராவில் உற்பத்தியாகும் மார்க்கண்டேயன் நதியில் இருந்தும், சூளகிரி சின்னாறு பகுதியில் இருந்தும் அணைக்கு நீர்வரத்து இருந்தது. தற்போது கர்நாடகா அரசு, யார்கோள் என்ற இடத்தில் அணை கட்டியுள்ளதால், மார்க்கண்டேயன் நதிக்கு கடந்த ஓராண்டாக தண்ணீர் வருவதில்லை.

கே.ஆர்.பி., அணை மூலம் துவக்கத்தில், 9,012 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றன. ஆனால் கடந்த, 67 ஆண்டுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000 ஏக்கராக சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

3 மடங்கு அதிகரிப்பு

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறியதாவது: அணை கட்டியபோது, 9,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. ஆனால் கடந்த, 67 ஆண்டுகளில் பாசன பரப்பு, 3 மடங்காக உயர்ந்துள்ளது. இடது மற்றும் வலதுபுற கால்வாயில், 180 கன அடி நீர் செல்லுமாறு கட்டியிருந்தாலும், பல்வேறு ஆக்கிரமிப்பால் தற்போது, 120 கன அடி தண்ணீர் மட்டுமே செல்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. கால்வாயில், 2 பக்கமும், 20 அடி அகலத்திற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி வாய்க்காலை அகலமும், ஆழமும் படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

சீரமைக்க கோரிக்கை

கே.ஆர்.பி., அணை இடதுபுற கால்வாய் பயன்பெறுவோர் சங்க தலைவர் சிவகுரு கூறியதாவது: கே.ஆர்.பி., அணையிலிருந்து வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர், பாலேகுளி முதல் சந்துார் வரை உள்ள, 28 ஏரிகளில் நிரம்ப வேண்டும். ஆனால் இதுவரை கால்வாயை சீரமைக்காமல் உள்ளதால், அணை கட்டிய நாளில் இருந்து ஒரு முறைகூட, 28 ஏரிகளில் தண்ணீர் நிரம்பவில்லை. எனவே, கால்வாயை அகலப்படுத்தி, உயரப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், 5,000 ஹெக்டேர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெறும். இவ்வாறு, அவர் கூறினார்.

காமராஜருக்கு சிலை

முன்னாள் காங்., கிழக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி கூறுகையில்,''அணை கட்டி, மாவட்டத்தில் இன்று எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்தியது போல் காணப்படும் இந்த விவசாய நிலங்கள் பயன்பெற காரணமாக இருந்த, அப்போதைய தமிழக முதல்வர் காமராஜருக்கு, கே.ஆர்.பி., அணை பகுதியில் ஒரு வெண்கல சிலை வைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அணை பிறந்த நாளன்று, காமராஜரின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து, கொண்டாட வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us