/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
கிருஷ்ணகிரி மாவட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
கிருஷ்ணகிரி மாவட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
கிருஷ்ணகிரி மாவட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : பிப் 03, 2024 03:37 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி, மாவத்துார் கூட்ரோடு பகுதியில், தாதம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட கிராம மக்களால் புதியதாக கட்டப்பட்ட, பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
மாவத்துார் பெருமாள் கோவிலிலுள்ள வினாயகர் சன்னதியிலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக பால் குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் மங்கள வாத்திய இசையுடன், நான்காம் கால யாக வேள்வி பூஜைகள் துவங்கியது. பின் காலை, 10:00 மணிக்கு விமான கோபுரம், பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்
நடந்தது.
வினாயகர், வீரபத்திரர், கரக தேவதை, மூலவர் பட்டாளம்மனுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
* கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கோ-ஆபரேட்டிவ் காலனி, 2வது கிராசில் அமைந்துள்ள நாகம்மாள் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை புனிதநீர், முளைப்பாலிகைகள், மங்கல இசை முழங்க கோவிலுக்கு எடுத்து
வந்தனர்.
நேற்று காலை இரண்டாம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு, 8:30 மணிக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா
நடந்தது.
தொடர்ந்து நாகம்மாள் சுவாமிக்கு அபி ேஷகம், பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் நாகம்மாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
* காவேரிப்பட்டணம் அடுத்த, போத்தாபுரம் சுண்ணாம்பு பாறை குட்டையில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது. நேற்று காலை, 6:15 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மஹாவேள்வி, மஹா பூர்ணாஹூதி,
தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவையும், காலை, 8:00 மணிக்கு பூர்ண கும்ப லக்னத்தில், கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, 39 குடும்பத்தார் மற்றும் ஊர்பொதுமக்கள்
செய்திருந்தனர்.

