/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மஹா சாந்த காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
மஹா சாந்த காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 24, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி : பர்கூர் மஹா சாந்த காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் 59வது ஆண்டு விழா கடந்த, 21ல் மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
நேற்று காலை, 4ம் கால பூஜை, விமான கலத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் கும்பாபிஷேகம், அம்மனுக்கு பால் அபிஷேகம் ஆகியவை நடந்தது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (மே 24) முதல் மண்டல பூஜை துவங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மஹா சாந்த காளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.