/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பச்சையம்மன், முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
/
பச்சையம்மன், முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 02, 2025 01:18 AM
போச்சம்பள்ளிகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்துார் கிராமத்தில், புதியதாக கட்டப்பட்ட மன்னார் ஈஸ்வரர் சமேத பச்சையம்மன், முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
காலை, 6:00 மணிக்கு வினாயகர் பூஜையுடன் ஆரம்பித்து, சகஸ்ரநாம பாராயணம், சோடச உபசார பூஜை, தச தரிசனம், மகா மங்கல ஆர்த்தி நடத்தி, திருவருட்பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் புனிதநீர் கலசங்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச்சென்று, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, கோவிலின் கோபுர கலசங்கள் மீது, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

