ADDED : அக் 23, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சாரகப்பள்ளியை சேர்ந்தவர் எல்லப்பா, 56, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 18 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம், ஆனேக்கல் அடுத்த தத்தனஹள்ளியில் தன் மனைவி காந்தம்மாவுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் ஆனேக்கல் அருகே நடந்த, தசரா பண்டிகை அம்பாரியை பார்க்க செல்வதாக கூறி சென்றுள்ளார். நேற்று காலை, சிக்கரெ மைதானம் அருகே கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். போலீசார் விசாரணையில் அவர், சிலருடன் அப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதும், அப்போது தகராறு ஏற்பட்டபோது, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் தெரிந்தது. கர்நாடகா மாநில அத்திப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
