/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.4.50 கோடியில் அழகுபடுத்தப்பட்ட ஏரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு

ADDED : அக் 08, 2025 01:43 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட சிப்காட் பகுதியில், சின்ன எலசகிரி காமராஜ் நகர் செல்லும் சாலையோரம், 10 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. சரியாக துார்வாராததால், ஏரியின் ஆழம் குறைந்து மொத்தம், 5 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே தேங்கி வந்தது. இந்த ஏரியில் அப்பகுதி குப்பை, கழிவுகளை கொட்டி வந்ததுடன், கழிவு நீர் நேரடியாக ஏரியில் கலந்து வந்ததால், ஏரி மாசடைந்து காணப்பட்டது.
இந்நிலையில், 'நமக்கு நாமே' திட்டத்தில், டைட்டன் நிறுவனம் தன் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 4.50 கோடி ரூபாய் மதிப்பில், 17.01 கோடி லிட்டர் நீரை சேமிக்கும் வகையில், ஏரியை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி உள்ளது. மேலும், ஏரிக்கரையில், 950 மீட்டர் நடைபாதை, சிறுவர்கள் விளையாட பூங்கா, 4,300 மரக்கன்றுகள் போன்றவற்றை, டைட்டன் நிறுவனம் அமைத்துள்ளது.
அத்துடன் ஏரிக்கு கழிவு நீர் வராமல் தடுக்கப்பட்டுள்ளது. ஏரியில் தற்போது பெய்த மழைநீர் தேங்கியுள்ளது. ஏரியை மக்கள் பயன்பாட்டிற்கு, ஓசூர் மாநகர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், டைட்டன் நிறுவன நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் ஆகியோர் நேற்று திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மண்டல தலைவர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.