/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்பணியாளர் பிரிவில் பயிற்சி 23 தொழிலாளர்களுக்கு சான்றிதழ்
/
மின்பணியாளர் பிரிவில் பயிற்சி 23 தொழிலாளர்களுக்கு சான்றிதழ்
மின்பணியாளர் பிரிவில் பயிற்சி 23 தொழிலாளர்களுக்கு சான்றிதழ்
மின்பணியாளர் பிரிவில் பயிற்சி 23 தொழிலாளர்களுக்கு சான்றிதழ்
ADDED : அக் 08, 2025 01:30 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று, மின் பணியாளர் பிரிவில், ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற, 23 தொழிலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பயிற்சி சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் பணியாளர் பிரிவில், ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த, 22 முதல், 28 வரை, 7 நாட்கள், 23 தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு, அதற்கான பயிற்சி சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்டத்தில் 1,700 தொழிலாளர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
7 நாட்கள் நடக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கு, கூலி இழப்பீட்டு தொகை நாள் ஒன்றுக்கு, 800 ரூபாய் வீதம், 7 நாட்களுக்கு, 5,600 ரூபாய் மற்றும் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு) மாதேஷ்வரன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.