/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் நடிகை சில்பா மஞ்சுநாத் தரிசனம்
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் நடிகை சில்பா மஞ்சுநாத் தரிசனம்
பிரத்யங்கிரா தேவி கோவிலில் நடிகை சில்பா மஞ்சுநாத் தரிசனம்
பிரத்யங்கிரா தேவி கோவிலில் நடிகை சில்பா மஞ்சுநாத் தரிசனம்
ADDED : அக் 08, 2025 01:29 AM
ஓசூர், ஓசூர் அருகே உள்ள பிரத்யங்கிரா தேவி கோவிலில் நடந்த மிளகாய் வத்தல் யாகத்தில், சினிமா நடிகை சில்பா மஞ்சுநாத் தன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மோரனப்பள்ளியில், ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி இரவு, மிளகாய் வத்தல் யாகம் நடக்கிறது. இதில் பங்கேற்றால், பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி நீங்கி நலமுடன் வாழலாம் என்ற நம்பிக்கை உள்ளது. புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் இரவு, மூலவர் பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, பிரத்யங்கிரா தேவி அம்மன் சிலை முன்புள்ள பெரிய யாக குண்டத்தில், மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.
தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்திருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வழிபட்டனர். இதில், தமிழில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த 'காளி' திரைப்படம் மற்றும் 'வலை, சிங்க பெண்ணே, பேரழகி ஐ.எஸ்.ஐ., இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' போன்ற படங்களில் நடித்த நடிகை சில்பா மஞ்சுநாத், தன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.