/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்மஸ்தலா கோவிலில் லட்ச தீபோற்சவம் நிகழ்ச்சி 10 டன் அரிசி, 25 டன் காய்கறி அனுப்பி வைப்பு

ADDED : நவ 30, 2024 02:03 AM
ஓசூர்: கர்நாடகாவில் உள்ள, தர்மஸ்தலா கோவில் லட்ச தீபோற்சவம் நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, 10 டன் அரிசி, 25 டன் காய்கறி, ஓசூர் பகுதியில் இருந்து அனுப்பி வைக்-கப்பட்டன.
கர்நாடகா மாநிலம், தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் லட்ச தீபோற்சவம் ஏற்றும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான லட்ச தீபோற்சவம் நிகழ்ச்சி இன்று (நவ., 30) நடக்கிறது. இதில், கர்நா-டகா மாநிலம் மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில், ஓசூர் அருகே பாகலுார், சூடாபுரம் சுற்றுப்-புற கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் தங்கள் நிலங்களில் விளைந்த விளைச்சலை கோவிலுக்கு அனுப்பி வைப்பர்.அதேபோல், 26 வது ஆண்டாக மஞ்சுநாத சுவாமி அன்னதான கமிட்டி சார்பில், விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த, 25 டன் காய்கறி, 10 டன் அரிசி ஆகியவற்றை, பாகலுாரில் இருந்து மூன்று லாரிகள் மூலம் நேற்று கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, பாகலுார் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலுக்கு அன்-னதானத்திற்கு காய்கறிகள், அரிசி மூட்டைகள் அனுப்பப்பட்டன. லாரிகளுடன் விவசாயிகளும் கோவிலுக்கு சென்றனர்.