/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நீதிபதி மீது காலணி வீச்சு தனி நபராக வக்கீல் ஆர்ப்பாட்டம்
/
நீதிபதி மீது காலணி வீச்சு தனி நபராக வக்கீல் ஆர்ப்பாட்டம்
நீதிபதி மீது காலணி வீச்சு தனி நபராக வக்கீல் ஆர்ப்பாட்டம்
நீதிபதி மீது காலணி வீச்சு தனி நபராக வக்கீல் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 26, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீசிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நீதிபதி மீது காலணி வீசியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இச்சம்பவத்தை கண்டித்தும், ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயில் முன், உயர்நீதிமன்ற வக்கீல் சண்முகம், தனிநபராக நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார். தனி நபராக சண்முகம் போராட்டம் நடத்தியதால், அவ்வழியாக சென்ற மக்கள் கவனத்தை ஈர்த்தார்.