/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி ஆவின் வளாகத்தில் தென்னை மகசூலுக்கு குத்தகை ஏலம்
/
கிருஷ்ணகிரி ஆவின் வளாகத்தில் தென்னை மகசூலுக்கு குத்தகை ஏலம்
கிருஷ்ணகிரி ஆவின் வளாகத்தில் தென்னை மகசூலுக்கு குத்தகை ஏலம்
கிருஷ்ணகிரி ஆவின் வளாகத்தில் தென்னை மகசூலுக்கு குத்தகை ஏலம்
ADDED : பிப் 07, 2024 11:58 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேலு வெளியிட்டுள்ள
அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி பால் பண்ணை வளாகத்திலுள்ள, 525 தென்னை மரங்கள் மகசூல் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலம் வரும், 16ல் நடக்கிறது. வரும் மார்ச், 1 முதல் வரும் 2026 பிப்., 28 வரை உள்ள இரண்டு ஆண்டு காலத்திற்கான தென்னை மர மகசூலை குத்தகைக்கு விட, மூடி முத்திரையிட்ட விலைப்புள்ளிகள் வியாபாரிகளிடமிருந்து கோரப்படுகிறது.
குத்தகை எடுக்க விரும்புபவர்கள், அலுவலக வேலை நாட்களில் வரும், 16 மதியம், 12:00 மணி வரை, 200 ரூபாயை அலுவலக வங்கி கணக்கு எண்: 05490100005632ல் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரும், 16 மதியம் 2:00க்குள் ஒப்படைக்க வேண்டும். அதில், பிணையத்தொகை, 5000 ரூபாய் வங்கி வரைவோலையுடன், விலைப்புள்ளியை இணைத்து வழங்க வேண்டும்.
விலைப்புள்ளி திறப்பு மற்றும் ஏலம் வரும், பிப்., 16 மதியம் 2:30 மணியளவில் கிருஷ்ணகிரி ஆவின் நிர்வாக அலுவலகத்தில் நடக்கும். விலைப்புள்ளிகள் சமர்ப்பிக்காதவர்களும், 5,000 ரூபாய் வங்கி வரைவோலையை செலுத்தி, பகிரங்க ஏலத்தில் நேரடியாக பங்கேற்கலாம்.
விண்ணப்ப படிவங்களை, பொது
மேலாளர், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி, என்ற முகவரிக்கு உரிய நேரத்தில் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

