/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாமந்தி பூ வளர்ச்சிக்கு உதவும் 'எல்.இ.டி.,' பல்புகள் கிருஷ்ணகிரி விவசாயிகளின் சூப்பர் 'ஐடியா'
/
சாமந்தி பூ வளர்ச்சிக்கு உதவும் 'எல்.இ.டி.,' பல்புகள் கிருஷ்ணகிரி விவசாயிகளின் சூப்பர் 'ஐடியா'
சாமந்தி பூ வளர்ச்சிக்கு உதவும் 'எல்.இ.டி.,' பல்புகள் கிருஷ்ணகிரி விவசாயிகளின் சூப்பர் 'ஐடியா'
சாமந்தி பூ வளர்ச்சிக்கு உதவும் 'எல்.இ.டி.,' பல்புகள் கிருஷ்ணகிரி விவசாயிகளின் சூப்பர் 'ஐடியா'
ADDED : பிப் 18, 2025 07:24 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாமந்தி பூ சாகுபடியில், நுாதன முயற்சியாக, எல்.இ.டி., பல்புகளை விவசாயிகள் பயன்படுத்து-கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள், பரவலாக சாமந்தி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வறட்சியை சமாளித்து வளர்-வதால், சாகுபடியில் நஷ்டம் குறைவு என்பதால் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக, 70 முதல், 90 நாட்களில் பூக்கள் அறுவடைக்கு தயாராகும். பூக்க துவங்கியவுடன் வாரம் ஒரு முறை என ஆறு முறை அறுவடை செய்யலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஓசூர், கெலமங்கலம்,
தேன்கனிக்கோட்டையில் பனிப்பொழிவு அதிகரிப்பால், செடிகள் வீணாகி பூ வளர்ச்சியும் பாதிக்கிறது. இதை தடுக்க சாமந்தி பூ தோட்டத்தில் எல்.இ.டி., விளக்குகளை விவசாயிகள் வைத்துள்ளனர். இதனால் விளைச்சல் அதிகரிப்ப-தாக விவசாயிகள் கூறுகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டி, பூவத்தி, உப்பு குட்டை ஆகிய பகுதிகளில், பல இடங்களில் இந்த நுாதன முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்-வேறு வகையான சாமந்தி பூ சாகுபடி நடக்கிறது. இதில் ஹைபிரிட் வகை சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் இரண்டரை மாதங்களிலேயே பூக்கள் பூக்க துவங்கும். ஐந்து முறை அறுவடை செய்யலாம்.
மாவட்டத்தில் அதிக பனிப்பொழிவால் சூரிய ஒளி குறைவாக கிடைக்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கைக்கு தேவையான வெப்ப-நிலை கிடைப்பதில்லை. எனவே எல்.இ.டி., விளக்கு
களை பயன்படுத்துகின்றனர். இரவு மற்றும் பகலில், 11:00 மணி வரையிலும் எரிய வைத்து வெப்பநிலையை அளிப்பதால், செடிகள் வீணாகாமல் பூ வளர்ச்சிக்கும் உதவுகிறது. மற்றபடி எல்.இ.டி., விளக்குகளை வைப்பதால் விரைவாக பூ பூக்கிறது என்பது உண்மையில்லை. பனியால் செடிகள் வாடாமலிருக்-கவும், பூக்கள் வளர்ச்சிக்காக மட்டுமே எல்.இ.டி., விளக்குகள் வைக்கின்றனர். இது மற்ற மாவட்டங்களுக்கு பொருந்தாது. இவ்-வாறு கூறினார்.

