/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையோர தள்ளுவண்டி கடைகளை அகற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை
/
சாலையோர தள்ளுவண்டி கடைகளை அகற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை
சாலையோர தள்ளுவண்டி கடைகளை அகற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை
சாலையோர தள்ளுவண்டி கடைகளை அகற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை
ADDED : நவ 21, 2024 01:17 AM
சாலையோர தள்ளுவண்டி கடைகளை
அகற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை
கிருஷ்ணகிரி, நவ. 21-
'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, சாலையோர தள்ளுவண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாலையோர பாஸ்புட் கடைகளால் ஏற்படும் சிரமங்கள் குறித்து கடந்த, 9ல் 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கிருஷ்ணகிரியில், சாலையோரங்களில் அனுமதியின்றி நடத்தும் தள்ளுவண்டி கடைகளை அகற்றா விட்டால், உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை கிருஷ்ணகிரி உதவி கோட்டப்பொறியாளர் அன்புஎழில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி நகரில், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பிலுள்ள சென்னை சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலை மற்றும் ராயக்கோட்டை சாலை உள்ளிட்டவற்றில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நெடுஞ்சாலைத்துறையின் அனுமதியின்றி, ஆங்காங்கே தற்காலிக தள்ளுவண்டி கடைகள் மூலம் தின்பண்டங்கள், சிற்றுண்டி மற்றும் பிரியாணி ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால், மாலை மற்றும் இரவில் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்காலிக கடைகளை அவற்றின் உரிமையாளர்கள் அப்புறப்படுத்தி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படா வண்ணம் நடக்க வேண்டும். அகற்றப்படாத கடைகள், போலீசார் மூலம் அப்புறப்படுத்தி, பொது ஏலத்தில் விடப்படும். சம்பந்தப்பட்ட தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிந்து சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

