ADDED : அக் 30, 2024 01:14 AM
சட்ட விழிப்புணர்வு முகாம்
ஊத்தங்கரை, அக். 30--
ஊத்தங்கரையிலுள்ள பகல் நேர பராமரிப்பு மையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் தீபாவளியை முன்னிட்டு நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வள பொறுப்பு மேற்பார்வையாளர் வசந்தி தலைமை வகித்தார். ஊத்தங்கரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தார்.
ஊத்தங்கரை சார்பு நீதிபதியும், வட்ட சட்ட பணிகள் ஆணை குழு தலைவருமான கலைவாணி மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி அமர்ஆனந்த் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டத்திலுள்ள சலுகைகள், பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, நலஉதவிகளை வழங்கினர்.
இதில், ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகன், செயலாளர் விஜயன், துணைத் தலைவர் பிரபாவதி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊத்தங்கரை வட்ட சட்டப்பணிகள் ஆணை குழு லாவண்யா, இனியன் ஆகியோர்
செய்திருந்தனர்.