/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
480 குழுக்களுக்கு ரூ.53.11 கோடி கடனுதவி வழங்கல்
/
480 குழுக்களுக்கு ரூ.53.11 கோடி கடனுதவி வழங்கல்
ADDED : ஜூன் 12, 2025 01:33 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 480 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த, 888 பயனாளிகளுக்கு, 53.11 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு தின விழாவை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் ,நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 480 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த, 888 பயனாளிகளுக்கு, 53.11 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினர்.
தமிழ்நாடு, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.