/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,804 வழக்குகளில் ரூ.17.97 கோடிக்கு தீர்வு
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,804 வழக்குகளில் ரூ.17.97 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,804 வழக்குகளில் ரூ.17.97 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,804 வழக்குகளில் ரூ.17.97 கோடிக்கு தீர்வு
ADDED : டிச 15, 2024 01:09 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத்
1,804 வழக்குகளில் ரூ.17.97 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரி, டிச. 15-
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குமரகுரு பேசியதாவது: கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஓசூர், தேன்க-னிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்கு, குடும்பநல வழக்கு, வங்கி கடன் வழக்கு, காசோலை வழக்கு, நிதி நிறுவன வழக்கு, பாகப்-பிரிவினை வழக்கு மற்றும் முன் வழக்குகள் ஆகியவை விசார-ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
கடந்த, 2023, ஜூலை, 6ல், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே நடந்த விபத்தில் பலியான பர்கூர் துணை பி.டி.ஓ.,க்கள் முகிலன், பாரதி ஆகியோருக்கு தலா, 98 லட்சம் ரூபாய், 96 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை உள்பட மாவட்டம் முழுவதும் எடுத்து கொள்ளப்பட்ட, 2,994 வழக்குகளில், 1,804 வழக்குகளுக்கு, 17 கோடியே, 97 லட்சத்து, 77 ஆயிரத்து, 466 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
இவ்வாறு பேசினார்.
மாவட்ட குடும்பநல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோகுலகிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், கூடுதல் சார்பு நீதிபதி ஜெனிபர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயந்தி, வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்தராஜலு, துணைத்தலைவர் குமாரசாமி, செயலாளர் சக்திநாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.