/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' போச்சம்பள்ளியில் திட்ட முகாம்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' போச்சம்பள்ளியில் திட்ட முகாம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' போச்சம்பள்ளியில் திட்ட முகாம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' போச்சம்பள்ளியில் திட்ட முகாம்
ADDED : நவ 21, 2024 01:18 AM
'உங்களை தேடி உங்கள் ஊரில்'
போச்சம்பள்ளியில் திட்ட முகாம்
போச்சம்பள்ளி, நவ. 21-
போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட, 34 வருவாய் கிராமங்களில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முதல்வர் திட்ட முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் மனுக்களை நேற்று பெற்றனர்.
இதில் கலெக்டர் சரயு, வேலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு முறையாக உணவு வினியோகிக்கப் படுகிறதா என்றும், அதேபோல் ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வினியோகிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பிற்பகல், 3:00 மணிக்கு கிராமங்களுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம், கலெக்டர் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அதன் பின் மாலை 4:00 மணிக்கு, போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களின் கோரிக்கையை கேட்டறியும் வகையில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், அதிகாரிகளிடம், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.