ADDED : ஜூன் 17, 2025 01:42 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தேன்கனிக்கோட்டை தாலுகாவில் நாளை (ஜூன் 18) காலை, 9:00 முதல், 19ம் தேதி காலை, 9:00 மணி வரை, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் நடக்கிறது. மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறை அலுவலர்களும், ஒரு நாள் முழுவதும் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் தங்கி, கிராமங்கள் தோறும் கள ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்குதடையின்றி செல்வதை உறுதி செய்வார்கள்.
கள ஆய்வில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, நாளை (ஜூன் 18) மதியம், 2:30 மணிக்கு, தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், கள ஆய்வு அலுவலர்கள் கூட்டமும், மாலை, 4:00 மணிக்கு, பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டமும் நடக்கிறது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.