/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'உங்களை தேடி, உங்கள் ஊரில்' சூளகிரியில் திட்டப்பணி துவக்கம்
/
'உங்களை தேடி, உங்கள் ஊரில்' சூளகிரியில் திட்டப்பணி துவக்கம்
'உங்களை தேடி, உங்கள் ஊரில்' சூளகிரியில் திட்டப்பணி துவக்கம்
'உங்களை தேடி, உங்கள் ஊரில்' சூளகிரியில் திட்டப்பணி துவக்கம்
ADDED : பிப் 01, 2024 10:47 AM
ஓசூர்: சூளகிரியில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று துவங்கி வைத்தார். காமன்தொட்டி, அங்கொண்டப்பள்ளி, ஏ.செட்டிப்பள்ளி ஆகிய பஞ்.,க்களில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் ஆய்வு செய்து, முதல்வரின் காலை உணவு திட்டம், மாணவ, மாணவியரின் கற்றல், கற்பித்தல் திறன், குடிநீர், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டார்.
கால்நடை மருந்தகங்கள், வி.ஏ.ஓ., அலுவலகம், ஊராட்சி செயலர் அலுவலகங்கள், ரேஷன்கடைகள், இருளர் இன மக்களின் குடியிருப்புகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் விபரங்கள், சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காமன்தொட்டி இ.எஸ்.ஐ., மருந்தகத்தில் வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்து கையிருப்புகள், கூட்டுறவு துறை மற்றும் பாரத ஸ்டேட் வங்கி சார்பாக இயங்கி வரும், இ--சேவை மையங்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு செய்தார்.
சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவியரை சந்தித்து, பொதுத்தேர்விற்கு நல்ல முறையில் தயாராக ஆலோசனை வழங்கினார். சூளகிரி தாலுகாவில் மொத்தம், 87 கிராமங்களில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அதேபோல், சென்னப்பள்ளியில் மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, வெங்கடேசபுரத்தில் கூடுதல் கலெக்டர் வந்தனாகார்க், சூளகிரியில் ஓசூர், சப் கலெக்டர் பிரியங்கா, உத்தனப்பள்ளியில் டி.ஆர்.ஓ., சாதனைகுறள், சானமாவு கிராமத்தில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி என, பல்வேறு துறை அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு செய்தனர்.