ADDED : ஆக 10, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட கனிமங்கள் மற்றும் குவாரிகள் துறை உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், மத்திகிரியிலுள்ள தனியார் பள்ளி அருகே, நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், எஸ்.முதுகானப்பள்ளியிலிருந்து, கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளிக்கு, 6 யூனிட் ஜல்லியை ஏற்றி செல்வது தெரிந்தது.
லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். கெலமங்கலம் அருகே குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன், 30, அத்திப்பள்ளி அருகே பல்லுாரை சேர்ந்த, லாரி உரிமையாளர் நாகராஜ்ரெட்டி, 52, ஆகியோர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

