ADDED : ஏப் 14, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், நேற்று முன்தினம் குப்பச்சிப்பாறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது, அதில், 2 யூனிட் மணல் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிந்தது.
இது குறித்து உதவி இயக்குனர் வர்ஷா புகார் படி, குருபரப்பள்ளி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.

