ADDED : ஜன 26, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளப்பிரிவு பறக்கும் படை துணை இயக்குனர் முத்து மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் பர்கூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
பர்கூர் அருகே சிகரலப்பள்ளி கூட்-ரோடு அருகே மாரியம்மன் கோவில் அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. அதிகாரிகள் புகார் படி, பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

