ADDED : ஆக 05, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் வி.ஏ.ஓ., வனஜா மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் அருகே, சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், ஒன்றரை யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து வனஜா புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

