/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி
/
மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி
ADDED : அக் 20, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சாரம் தாக்கி
லாரி டிரைவர் பலி
ஓசூர், அக். 20-
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடைய
தரமங்கலம் காமராஜபுரம் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம், 56; கன்டெய்னர் லாரி டிரைவர். கடந்த, 17 இரவு, 7:30 மணிக்கு, ஓசூர் ஜூஜூவாடியில் பழைய போக்குவரத்து சோதனைச்சாவடி பின்புறம் உள்ள தனியார் நிறுவனத்திற்கு, சென்னையில் இருந்து மின்சாதன பொருட்களை ஏற்றி வந்தார். நிறுவனம் முன் லாரியை நிறுத்தி விட்டு, லாரியின் கன்டெய்னர் பகுதி கதவை திறந்த போது, அங்கிருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது கதவு பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே டிரைவர் தர்மலிங்கம் பலியானார். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.