ADDED : அக் 04, 2026 03:33 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி வி.ஏ.ஓ., திம்ம-ராயன் மற்றும் வருவாய்த்துறையினர், தமிழக எல்லையில் உள்ள பல்லுார் சந்திப்பு சாலையில், வாகன சோதனை செய்தனர்.
அப்-போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, ஓசூரிலிருந்து கர்நாடகாவிற்கு, 2 யூனிட் எம்.சாண்ட் கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிப்காட் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., திம்மராயன் புகார்படி, லாரி டிரைவர் மற்றும் உரிமை-யாளர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் தேடி வருகின்றனர்.சோலார் பேனல் தலையில் விழுந்து
