தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நுரை, துர்நாற்றத்துடன் குடிநீர் கீழ்குப்பம் பொதுமக்கள் அவதி

நுரை, துர்நாற்றத்துடன் குடிநீர் கீழ்குப்பம் பொதுமக்கள் அவதி

நுரை, துர்நாற்றத்துடன் குடிநீர் கீழ்குப்பம் பொதுமக்கள் அவதி


UPDATED : அக் 04, 2026 05:36 AM

ADDED : அக் 04, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 05:36 AM ADDED : அக் 04, 2026 03:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே நுரை, துர்நாற்றத்துடன் வரும் குடிநீரால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கீழ்குப்பம் கிரா-மத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில், 30,000 லிட்டர் கொள்-ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்-டுள்ளது. ஆழ்துளை கிணறு மூலம் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்-பட்டு, குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினி-யோகம் செய்வது வழக்கம்.

நேற்று வழக்கம் போல் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து பைப்புகளுக்கு வரும் குடிநீர் நுரை பொங்கியும், துர்நாற்-றமும் வீசியது. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பஞ்., நிர்வாகத்-திடம் தகவல் அளித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறு-கையில், 'மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடியிருப்பு-களுக்கு தண்ணீர் செல்லும் குழாயில், பள்ளியின் அருகே சாக்-கடை

கழிவுநீர் கலந்து வந்துள்ளது' என்றனர்.

கீழ்குப்பம் பஞ்., நிர்வாகத்தினர் கூறுகையில், 'மேல்நிலை நீர்-தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இக்குழாய்கள் உடனடியாக

சீரமைக்கப்படும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us