லாரியில் சோதனை: முதல்வர் மொபைல் எண் உள்ளதாக அதிகாரிகளிடம் டிரைவர் மிரட்டல்
லாரியில் சோதனை: முதல்வர் மொபைல் எண் உள்ளதாக அதிகாரிகளிடம் டிரைவர் மிரட்டல்
ADDED : ஜூலை 23, 2026 01:35 AM
ஓசூர்: ஓசூரில், கன்டெய்னர் லாரியை, சோதனை செய்ய நிறுத்திய அதி-காரியிடம், முதல்வர் விஜய் மொபைல் எண் இருப்பதாக கூறி, வடமாநில லாரி டிரைவர் ஒருவர் மிரட்டியுள்ளார்.
தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடியில், போக்குவரத்து சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. இங்கு, கர்நாடகா வழி-யாக தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு, பர்மிட் வழங்கு-வது, அதிக லோடு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்-றன.
சரியாக பர்மிட், வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய, மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள், வாகனங்-களை நிறுத்தி சோதனை செய்வது வழக்கம்.அதன்படி கடந்த, 20ம் தேதி பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அதியமான், அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரியை, சோதனை செய்ய நிறுத்தினார். பின்னர் டிரைவரிடம், லாரி பர்மிட், அதில் பொருட்கள் இருந்தால் அதற்கான பில் மற்றும் ஆவணங்களை காட்ட கேட்டுள்ளார்.
அதற்கு, லாரியில் பொருட்கள் ஏதும் இல்லை என, மஹாராஷ்டி-ராவை சேர்ந்த அந்த டிரைவர் ஹிந்தியில் கூறியுள்ளார்.
சந்தேகத்தால், பர்மிட் மற்றும் கன்டெய்னரை திறந்து காட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அதியமான் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த லாரி டிரைவர், 'தமிழக முதல்வர் விஜய் மொபைல் எண் என்னிடம் இருக்கு, நீங்க லஞ்சம் வாங்க முடி-யாது. இதை நான், வீடியோ எடுத்து, அவருக்கு அனுப்பி விடுவேன். இந்த இடத்துல சோதனைச்சாவடி கிடையாது' என, ஹிந்தியில் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் நடந்த சம்ப-வத்தை, தன் மொபைல்போனில் வீடியோ பதிவும் செய்தார். அதிகாரிகள் சோதனை நடத்தாத நிலையில், டிரைவர் அங்கிருந்து லாரியுடன் சென்றார். இக்காட்சிகள் வைரலாகின.
இது குறித்து, சோதனைச்சாவடி ஊழியர் களிடம் கேட்டபோது, 'மஹாராஷ்டிராவை சேர்ந்த இந்த லாரி டிரைவர், தொடர்ந்து, 3வது முறையாக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.
போலீசாரிடம் புகார் கொடுக்க, மேலதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். அனுமதியின்றி எங்களால் புகார் செய்ய முடிய-வில்லை. முதல்வர் விஜயிடம் புகார் செய்வதாக கூறி, அதிகாரி-களை பணி செய்ய விடாமல், இதுபோன்று தொடர்ந்து, அந்த லாரி டிரைவர் செயல்படுவதால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
அந்த லாரி டிரைவரிடம் நாங்கள் பணம் ஏதும் கேட்கவில்லை' என்றனர்.
