ADDED : ஜூலை 23, 2026 01:35 AM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்து வடுகனுாரை சேர்ந்தவர் அஞ்சலா. இவர், தன் மகளுடன் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
என் கணவர் சுப்-பிரமணி கடந்த, 2005ல் இறந்து விட்டார். எங்களுக்கு சந்திர-லேகா, 23, என்ற மகள் உள்ளார். கணவர் இறந்த பின், மாமனார் வீட்டில் உள்ளவர்கள் என்னை அடித்து துன்புறுத்தி, மகளுடன் வெளியேற்றி விட்டனர். என் கணவரின் சொத்துக்களையும் வழங்-கவில்லை. நான் அதே பகுதியில், 20 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். மகளுக்கு திருமணம் ஆகவில்லை. என் சொத்தையும் பறித்து கொண்டனர். என்னால், மகளுக்கு திரு-மணம் செய்ய முடியவில்லை. எங்களுக்கு உண்டான சொத்து-களை கேட்டால், என்னையும், மகளையும் கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். எங்கள் உயிருக்கும், தற்போது பாது-காப்பு இல்லாத சூழல் உள்ளது. இது குறித்து விசாரித்து, நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
