ADDED : ஜூலை 23, 2026 01:36 AM
கிருஷ்ணகிரி: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த மன உளைச்சலில் தவிக்கும் ஆசி-ரியர்களின் உரிமைகளை மீட்கவும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கவும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர தலைவர் மகபூப் பாஷா, வட்டார துணை தலைவி நளினிபி-ரியா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணை தலைவி மரியசாந்தி முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் தமிழ்-செல்வன், மகளிரணி செயலாளர் அனுராதா ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். பொருளாளர் சாதிக்உசேன் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். அதற்கான சட்ட திருத்தங்-களை வரும் லோக்சபா கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு சட்ட சபையில் தகுதித்தேர்வு கூடாது என, சட்ட திருத்தம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தற்போதைய நிலையில், ஆசிரியர்களின் பணி அனுபவங்களை கணக்கில் கொண்டு, பணிக்காலத்திற்கு ஏற்ற, வெயிட்டேஜ் மதிப்-பெண்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
