/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 கோடி நஷ்டம் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை
/
ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 கோடி நஷ்டம் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை
ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 கோடி நஷ்டம் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை
ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 கோடி நஷ்டம் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை
ADDED : நவ 14, 2024 06:57 AM
ஓசூர்: காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாலபாக்கம் டி.என்.எச்.பி., கால-னியை சேர்ந்தவர் ராஜதுரை, 46. கர்நாடகா மாநிலம், பெங்களூ-ருவில் தங்கி, சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணி-யாற்றி வந்தார்.
கடந்த, 11 மதியம் ஓசூரில் ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அவருக்கு உறவினர் ஒருவர் போன் செய்த நிலையில், அவர் போனை எடுக்காததால், லாட்ஜ் நிர்வாகத்திற்கு போன் செய்த உறவினர், அறையில் சென்று பார்க்க கூறியுள்ளார். ஊழி-யர்கள் சென்று பார்த்தபோது, ராஜதுரை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அவர் மனைவி கவிதா, 32, புகார் படி, நேற்று முன்தினம் ஓசூர் டவுன் போலீசார் விசாரித்தனர்.
இதில், ஷேர் மார்க்கெட்டில், 3 கோடி வரை முதலீடு செய்து, நஷ்-டத்தால் விரக்தியில் ராஜதுரை தற்கொலை செய்தது தெரிந்தது.