ADDED : ஜூலை 05, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து, ஊத்தங்கரையில், மா.கம்யூ., கட்சியின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.ஊத்தங்கரை வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.
மாநில குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டில்லிபாபு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமான அனைத்து போலீசார் மற்றும் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். கள்ளச்சாராயத்தை விற்கும் பெரும் புள்-ளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். இதில், மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் சபாபதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, இளவ-ரசன், கவிமணிதேவி மற்றும் பலர் பேசினர்.