/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காளியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம்
/
காளியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம்
ADDED : நவ 01, 2025 12:51 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா தொகரப்பள்ளி பில்லக்கொட்டாய் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த மாதம், 26ல் கொடி ஏற்றுதல், காப்பு கட்டுதலும், 29ல் புனித தீர்த்தம் அழைத்தல், கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, முளைப்பாரி ஊர்வலம் ஆகியவை நடந்தது.
நேற்று அதிகாலை, இரண்டாம் கால யாக வேள்விகள், நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவையும், காலை, 8:00 மணிக்கு, காளியம்மன் கோவில் மூலவர் கோபுர விமானம் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, கோ பூஜை, மஹா தீபாராதனையும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள்
பங்கேற்றனர்.

