/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
/
மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : நவ 26, 2024 01:41 AM
மாரியம்மன் கோவில்
மஹா கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி, நவ. 26-
கிருஷ்ணகிரி அருகிலுள்ள கே.பூசாரிப்பட்டி கிராமத்தில், மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை, மங்கள இசை, கணபதி பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் ஆகியவை நடந்தது. மாலையில் நவக்கிரஹ ஹோமம், சுவாமி பிரதிஷ்டை உள்ளிட்டவை நடந்தது.
நேற்று காலை, 7:30 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, கடம் புறப்பாடு ஆகியவையும், காலை, 10:00 மணிக்கு, கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இதில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே.பூசாரிப்பட்டி ஊர்மக்கள்
செய்திருந்தனர்.