ADDED : ஏப் 17, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பர்கூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், ஜெகதேவி சாலையில் உள்ள மஹா மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பர்கூர் பாரத கோவில் வளாகத்தில் இருந்து பம்பை, மேளதாளம் முழங்க, பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.