/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மலைக்கோவிலில் மகா நவசண்டியாகம் துவக்கம்
/
மலைக்கோவிலில் மகா நவசண்டியாகம் துவக்கம்
ADDED : ஆக 02, 2025 01:22 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திர
சூடேஸ்வரர் கோவிலில், உலக நலனுக்காகவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய், நொடியின்றி நீண்ட ஆயுள் பெறவும், 30ம் ஆண்டு மகா நவசண்டியாகம் நேற்று துவங்கியது.
காலை, 10:15 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு தேர்ப்பேட்டை பச்சைகுளத்தில் இருந்து நீர்க்குடம் புறப்படுதல், இரவு, 7:00 மணிக்கு கலசஸ்தாபனம், கலசபூஜை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
ஓசூர் முன்னாள் காங்., எம்.எல்.ஏ., மனோகரன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், ஜெயதேவ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் விழாக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் இன்று (ஆக., 2) காலை, 8:30 மணிக்கு கலசபூஜை, ருத்ர ஹோமம் நடக்கிறது.