/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது
/
கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது
ADDED : ஜூலை 16, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 35. இவர் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆட்டுக் கொட்டகை அமைத்திருந்தார். கடந்த, 11ல், அங்கு சென்ற வருவாய் துறையினர், ஆட்டு கொட்டகையை அகற்றினர்.
நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஈஸ்வரன், ஆட்டு கொட்டகை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், ஈஸ்வரனை கைது செய்தனர்.