/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் கடத்த முயன்றவர் கைது
/
புகையிலை பொருட்கள் கடத்த முயன்றவர் கைது
ADDED : ஜூலை 31, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு நின்றிருந்த ஒரு நபரின் பையை சோதனை செய்தனர். அதில், 18 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.-
விசாரணையில் அவர் பெயர் கருப்பையா, 50 என்பதும், மதுரை மாவட்டம் பேராயூர் தாலுகா சோழபுரத்தை சேர்ந்தவர் என்பதும் கர்நாடக மாநிலத்தில் புகையிலைபொருட்களை வாங்கி, விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிந்தது-. அவரை போலீசார் கைது செய்தனர்.