/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காதலை ஏற்க மறுத்த பெண் காரை சேதப்படுத்தியவர் கைது
/
காதலை ஏற்க மறுத்த பெண் காரை சேதப்படுத்தியவர் கைது
ADDED : ஜூலை 11, 2025 01:09 AM
ஓசூர், ஓசூர், மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயசீலன், 25, தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அதை அப்பெண் ஏற்கவில்லை. இந்நிலையில், அப்பெண்ணுக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.
பெண்ணின் திருமணத்திற்காக, அவரது தந்தை, ஒரு கார் வாங்கி தந்துள்ளார். தன்னை காதலிக்காமல், வேறொருவருடன் திருமணம் நடப்பது குறித்து அறிந்த ஜெயசீலன், தன் நண்பன் மன்னன், 22 என்பவருடன், நேற்று முன்தினம் இரவு, அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த புது காரை அடித்து உடைத்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அப்பெண்ணின் தந்தை முருகன், ஓசூர் சிப்காட் போலீசில் அளித்த புகார் படி, காரை சேதப்படுத்திய ஜெயசீலன், மன்னனை போலீசார் கைது செய்தனர்.